Latest Post

விஜய் டிவியின் 'செல்லக்குட்டி' பிக் பாஸ் 4ல் பங்கேற்பாரா?

Written By DTH News on 25 May 2020 | 1:11 PM

விஜய் தொலைக்காட்சி சேனலின் செல்லப் பிள்ளையான டிடி பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதம் துவங்கும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பிரச்சனையால் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கைவிடப்படுபவதாக தகவல் வெளியானது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசன் திட்டமிட்டபடி நடிக்கும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் வழக்கமாக துவங்கும் ஜூன் மாதத்திற்கு பதில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் நிகழ்ச்சி துவங்குமாம்.

முந்தைய 3 சீசன்களை போன்றே இந்த சீசனையும் கமல் ஹாஸன் தான் தொகுத்து வழங்கவிருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சண்டை சச்சரவுகள், காதல் காட்சிகளை பார்க்க ஒரு கூட்டம் உள்ளது என்றால், அந்த நிகழ்ச்சியில் கமல் பேசும் அரசியலை கேட்ட ஒரு கூட்டம் இருக்கிறது.

ட்விட்டரிலேயே மத்திய, மாநில அரசுகளை போடு போடுன்னு போட்டு விளாசும் கமல் இந்த சீசனில் பிக் பாஸ் மேடையில் என்னவெல்லாம் பேசப் போகிறாரோ என்பதை பார்க்க பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கண்டிப்பாக பால்கனி அரசு பற்றி பேசுவார் என்று எதிர்பார்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் 4 நிகழ்ச்சி நடக்கிறது என்பது உறுதியாகிவிட்டது, தொகுத்து வழங்குபவரும் தெரிந்துவிட்டது. ஆனால் முக்கியமானவர்களான போட்டியாளர்கள் தான் யார், யார் என்று இதுவரை தெரியவில்லை. போட்டியாளர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது. ஆனால் சத்தமில்லாமல் அந்த வேலையை பார்த்து வருகிறார்களாம்.

ட்விட்டரில் கவர்ச்சியை காட்டி மிரட்டும் கிரண் ரத்தோட், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகிறது. இந்நிலையில் தான் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி என்கிற டிடியை பிக் பாஸ் வீட்டில் பார்க்க ஆசைப்படுகிறார்கள் ரசிகர்கள்.
Will Dhivyadharshini Participate In Bigg Boss 4?

ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸுக்கு ஒரு செல்லக்குட்டி இருப்பார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சேனலின் செல்லக்குட்டியான டிடி அக்கா பிக் பாஸின் செல்லக்குட்டி ஆவதை பார்க்க ஆசையாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் டிடியை பிக் பாஸ் வீட்டில் பார்க்கத் துடிக்க முக்கிய காரணம் உள்ளது. டிடி நன்றாக பேசுவார். அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தால் ஜாலியாக பொழுது போகும். மேலும் யாராவது வாலாட்டினால் டிடி விஸ்வரூபம் எடுத்து அவர்களை அடக்குவார். நாங்களும் எத்தனை நாள் தான் டிடி அக்காவை சிரித்தபடியே பார்ப்பது. பிக் பாஸ் வீட்டிற்கு வந்தால் தானே அவரின் வேறு முகத்தையும் பார்க்க முடியும். அந்த முகத்தை பார்க்கத் தான் ஏங்குகிறோம் என்கிறார்கள் ரசிகர்கள்.


ஓட்டு விஷயத்தில் எல்லாம் டிடிக்கு பிரச்சனையே வராது. அவருக்கு இருக்கும் ரசிகர்கள் ஓட்டு போட்டாலே ஜெயித்து விடுவார். பிக் பாஸ் போட்டி தொடர்பாக முன்பே டிடியின் பெயர் அடிபட்டது. ஆனால் 3 சீசன்களிலும் அவரை பார்க்க முடியவில்லை. இந்நிலையில் தான் 4வது சீசனிலாவது டிடி அக்காவை பிக் பாஸ் வீட்டில் பார்த்துவிடத் துடிக்கிறார்கள் ரசிகர்கள்.

இதற்கிடையே காலில் அடிபட்டு கட்டு போட்டு வீட்டில் இருக்கும் டிடி விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

சன் டிவி படைத்த இமாலய சாதனை, TRP இல் இத்தனை கோடியா!

Written By DTH News on 10 May 2020 | 9:01 AM

சன் தொலைக்காட்சி தென்னிந்தியாவில் கொடிக்கட்டி பறக்கும் ஒரு நெட்வொர்க். எப்போதும் TRP இல் இவர்கள் தான் முதல் இடத்தில் இருப்பார்கள்.

அந்த அளவிற்கு பல சனல்கள் போட்டிக்கு வந்தாலும் இவர்களின் வளர்ச்சியை ஒரு போதும் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் சன் தொலைக்காட்சி கடந்த வாரம் மட்டும் TRP இல் 438 கோடி இம்ப்ரஸன் பெற்றுள்ளது.

இவை சன், உதயா, ஜெமினி, சூர்யா ஆகிய 4 சனல்கள் சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது.


உடனடி கடன் சேவை: Tatasky, d2h, dishtv வாடிக்கையாளர்களே ஒரு மகிழ்ச்சி செய்தி!

Written By DTH News on 03 May 2020 | 9:39 AM

கொரோனா ஊரடங்கின் காரணமாக அனைத்து கடைகளும், தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதையடுத்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது டிடிஎச் நிறுவனங்களும் சில வசதிகளை வழங்கியுள்ளன. 

டிஷ் டிவி முன்பாகவே அனைத்து பயனர்களுக்கும் பே லேட்டர் எனும் சேவையை வழங்கி வருகிறது. ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் வாடிக்கையாளர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் சேவை பெறுவதற்கு டிடிஎச் நிறுவனங்கள் தகுந்த வசதிகளை செய்து வருகின்றன. இதையடுத்து டிஷ் டிவி உடனடி கடன் சேவையை வழங்குகிறது. கடன் பெற விரும்பும் சந்தாதாரர்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 1800-274-9050 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்து, அவர்களின் கணக்குகளில் உடனடி கடன் பெறலாம். 

emergency free credit facility

டி2எச் நிறுவனம், தங்களது சந்தாதாரர்களுக்கு உடனடி கடன் வசதியை வழங்குகிறது. இதில் சில சிக்கல்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது உடனடி கடன் வசதியில் d2h ஒரு சேவை கட்டணத்தையும் உள்ளடக்கியுள்ளது. எனவே டி2எச் உடனடி கடன் வசதியைத் தேர்வுசெய்யும் சந்தாதாரர்கள் பின்னர் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் டாடா ஸ்கை நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அவசர இலவச கடன் வசதியை (emergency free credit facility) வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பு டாடா ஸ்கை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதன் தனது ஃபிட்னஸ் சேனலை இலவசமாக வழங்குவதாக அறிவித்த கையோடு இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவசர கடன் சேவையைத் தேர்வுசெய்யும் கூடுதல் கடன் தொகையை பின்னர் செலுத்த வேண்டும். இதற்கு எந்தவித சேவைக் கட்டணத்தையும் வழங்கவில்லை. டாடா ஸ்கை நிறுவன சந்தாதாரர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 080-61999922 இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து சேவை பெறலாம்.


டிஷ் டிவியில் இனிமேல் இந்த சேனல் FREE.. ஆனால்!

Written By DTH News on 19 April 2020 | 2:20 PM

டிஷ் டிவி இப்போது இந்திய ரூபா.60 மதிப்புள்ள மற்றொரு கட்டண சேவை சனலை இலவசமாக வழங்குகிறது.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பீதி காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள லொக்டவுன் நாட்களின் போது ஏற்கனவே நான்கு சேர்விஸ் சனல்களை இலவசமாகக் வழங்கிய டிஷ் டிவி, இப்போது மேலும் கட்டணமில்லாமல் மற்றொரு கட்டண சேர்விஸ் சனலை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இருப்பினும், இந்த இலவச சலுகையானது அனைவருக்கும் கிடைக்காது. குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது நீண்ட கால ரீசார்ஜ் செய்யும் தற்போதைய டிஷ் டிவி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்திய ரூபா.60 மதிப்புள்ள இந்த இலவச 'சினி ஆக்டிவ்' சேனல் கிடைக்கும்.

டாடா ஸ்கை நிறுவனத்தை போலவே, டிஷ் டிவியும் அதன் வாடிக்கையாளர்களுக்கு 12 மாதங்கள் அல்லது ஒரு வருடம் முன்பதிவு செய்தால் 30 நாட்கள் வரை இலவச சேவையை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிஷ் டிவி வாடிக்கையாளர்கள் மூன்று மாதங்கள் ரீசார்ஜ் செய்வதின் மூலம் ஏழு நாட்கள் கூடுதல் சேவையையும், ஆறு மாதங்கள் ரீசார்ஜ் செய்வதின் மூலம் 15 நாட்கள் கூடுதல் சேவையையும், 12 மாதங்கள் அல்லது 1 வருடம் ரீசார்ஜ் செய்வதின் மூலம் 30 நாட்கள் இலவச சேவையையும் பெறலாம்.


இந்த இலவச சேவையைப் பெற, அனைத்து வாடிக்கையாளர்களும் செய்ய வேண்டியது தற்போதைய மாதாந்த கட்டண  தொகையை இன்னும் நீண்ட காலத்திற்கு ரீசார்ஜ் செய்வதுதான். உதாரணமாக, உங்கள் டிஷ் டிவியின் மாதாந்த கட்டண தொகை இந்திய ரூபா.250 எனில், கூடுதல் 30 நாட்கள் சேவையை இலவசமாகப் பெற நீங்கள் இந்திய ரூபா.3,000 முன்பணத்துடன் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

மேலும், இந்திய நாட்டின் இரண்டாவது பெரிய டி.டி.எச் நிறுவனமான டிஷ் டிவி அதன் நீண்ட கால ரீசார்ஜ் சலுகைகளில் சிறிய மாற்றங்களையும் செய்துள்ளது. நீண்டகால ரீசார்ஜ் சலுகையானது New Tariff Package இன்  கீழ் மட்டுமே கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. எனவே நீங்கள் ஏற்கனவே ஒரு சனல் பக்கேஜில் சலுகையைப் பெற்றுக்கொண்டு இருந்தால், நீண்ட கால ரீசார்ஜ் சலுகையையும் சேர்த்து மொத்தம் இரண்டு சலுகைகளை பெற நீங்கள் பக்கேஜை மாற்ற வேண்டும். இது தான் தற்போது டிஷ் டிவி கொண்டு வந்துள்ள புதிய மாற்றம் ஆகும்.

இந்த தகவல்கள் டிஷ் டிவி இன் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து தொகுக்கப்பட்டவை.

TRP-யில் சன் டிவியையே பின்னுக்கு தள்ளிய தொலைக்காட்சி, ரசிகர்களுக்கே குழப்பம்!!!

Written By DTH News on 11 April 2020 | 10:03 PM

எந்தவொரு வணிக நோக்கமும் இல்லாமல் கடந்த 15 வருடங்களாக வாசகர்களுக்கு நாம் DTH தகவல்களை வழங்கி வருகின்றோம்.  குறித்த காலத்தில் வாசகர்கள் சினிமா தகவல் மற்றும் வதந்திகளுக்கு வழங்கிய முக்கியத்துவத்தை இதுபோன்ற தொழில்நுட்பம் சர்ந்த செய்திகளுக்கு வழங்கவில்லை என்பது உண்மை. எனவே இனிமேலாவது எமது தகவல்களை வாசிப்பதுடன் நின்றுவிடாமல் அதிகம் எமது தகவல்களை சமூகவலைத்தலங்களில் பகிருங்கள் (Sharre) மற்றும் (Like) பண்ணுங்கள்.

இந்திய தொலைக்காட்சி அலைவரிசைகளை Broadcast Audience Research council India ஒவ்வொரு வாரமும் பார்வையாளர்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப தொலைக்காட்சி அலைவரிசைகளை தரப்படுத்தும். அந்த வகையில் சன் டிவி தான் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும். அதுவும் இந்திய அளவிலேயே முதல் இடத்தில் இருக்கும்.

ஆனால் சன் தொலைக்காட்சி கடந்த வாரம் இந்தியளவில்  இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த விடயம் சன் தொலைக்காட்சி ரசிகர்களிடையில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
shakthimaan

இது ஒருபுறமிருக்க முதலிடத்தில் இருப்பது டிடி நேஷ்னல், என்பதுதான் பலருக்கும் ஆச்சரியம். ஆம், கேபிள் டிவி வந்த பிறகு டிடி நேஷ்னல் தொலைக்காட்சியை யாரும் பெரிதாக விரும்பி பார்ப்பது இல்லை.

ஆனால், இந்த முறை டிடி நேஷ்னல் தொலைக்காட்சி முதலிடத்திற்கு வந்துள்ளமைக்கான காரணத்தை நான் ஆராய்ந்து பார்த்தேன், அதற்கு காரணம் டிடிநேஷ்னல் தொலைக்காட்சியில் ஒருகாலத்தில்  மிக பிரபல்யமாய் ஒளிபரப்பாகிய சக்திமான் தொலைக்காட்சிதொடரை மறு ஒளிப்பரப்பு செய்து வருகின்றனர்.

Broadcast Audience Research council India வினால் தரப்படுத்தப்பட்ட அட்டவணை உங்கள் பார்வைக்காக் கீழுள்ளது மேலும் இந்த Link ஐ அழுத்துவதன் மூலம் ஒவ்வொருவாரமும் இந்திய தொலைக்காட்சி அலைவரிசைகளின் தரப்படுத்தல்களை நீங்களே அறிந்துகொள்ளலாம்.
-தொகுப்பு-
-பிரதீஸ்-

Week 13: Saturday, 28th March 2020 to Friday, 3rd April 2020
RankChannel NameWeekly Impressions (000s) sum
Week 13
1DD National1596923
2Sun TV1306360
3Dangal1151414
4SONY SAB892566
5Sony MAX803023
6Big Magic750781
7Zee Cinema682751
8STAR Gold642375
9NICK602369
10ETV Telugu582758
TOP 10 Channels *Across Genre : All India (U+R) : 2+ Individuals, To get this data on your Twitter timeline, tweet with #BarcTweet Top 10 Channels

10 கோடி ரூபாயை வழங்குவதாக அறிவித்ததது சன் டிவி

இந்த தகவல்கள் அனைத்தும் கீழ் குறிப்பிடப்படும் சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் மற்றும் நிறுவனங்களின் உத்தியோகபூர்வ ட்விட்டர்தளத்தில் இருந்து சேகரித்து தொகுக்கப்பட்டவை .

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசுக்கு உதவும் விதமாக பல்வேறு சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் உதவி தொகை அளித்து வருகின்றனர்.

நடிகர்களில் அக்ஷய் குமார் அதிகபட்சமாக 25 கோடி ரூபாயை தருவதாக அறிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் தல அஜித் 1.25 கோடி ருபாய் கொரோனா நிவாரண நிதியாக அளித்தார். அதில் 50 லட்சம் ருபாய் தமிழக அரசுக்கும், 50 லட்சம் ருபாய் மத்திய அரசுக்கும் கொடுத்தார்.


இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சன் டிவி குழுமம் 10 கோடி ரூபாயை கொடுப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் முன்னணியில் இருக்கும் தொலைக்காட்சி மற்றும் சினிமா தயாரிப்பு நிறுவனம் இந்த தொகையை அளித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தினை தயாரித்து வருகிறது. அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினையும் சன் பிக்சார்ஸ் தான் தயாரிக்கிறது. அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் கொரோனா ஊரடங்கு காரணமாக முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி விஜய்யின் பிகில் படத்தினை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் 50 லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவை கலக்கும் நஞ்சம்மாவின் கிராமியப் பாடல்! (பாடல் உள்ளே☞☞☛☛)

Written By DTH News on 09 April 2020 | 10:29 PM

மலையாள சினிமா உலகம் மிக எளிமையானது. பிரமாண்டத்தைவிட இயல்பை மட்டும் விரும்புபவர்கள் மலையாளிகள். அப்படி ஒரு எளிமையான மலையாள திரையுலகிலிருந்து கடந்த வருடம் வெளியான "ஜிமிக்கிகம்மல்" பாடல் ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்தது. அதன் பின்னர் ஒரு கிராமிய பாடல்  மலையாள ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

இந்த பாடலை பாடியவர் கேரளா எல்லையில் உள்ள தமிழக எல்லையான அட்டப்பாடியில் வசிக்கும் நஞ்சம்மா என்கிற பெண்மணி நஞ்சம்மா இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.
nanjamma

சசி இயக்கத்தில் ப்பிரித்திவிராஜ் விஜிமேனன் நடித்த "ஐயப்பனும் கோஷியும்" என்ற படத்தில் நஞ்சம்மா பாடிய "கலக்காத்த சந்தன மரம் வெகுவாக பூத்திருக்கு அத தினம் பறிச்சுக்கிட்டு" என்ற பாடல் இன்று கேரளாவில் பட்டி தொட்டி எங்கும் எதிரொலிக்கிறது. மலையாள சினிமாவும் ஊடகங்களும் நஞ்சம்மாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது.

ஒரு கிராமிய பாடல் இந்த அளவிற்கு மலையாள திரையுலகை ஆக்கிரமித்தது இதுதான் முதன் முறை. ஆனால் பாடலை பாடிய நஞ்சம்மா அட்டப்பாடியில் ஒரு எளிமையான வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். தான் பெற்ற குழந்தைகாளால் கைவிடப்பட்ட நிலையில் தானாக ஆடு மேய்த்து அதில் இருந்து வரும் வருமானத்தில் பிழைப்பு நடத்திவருகிறார். இன்று மலையாள திரை நட்சத்திரங்கள் பலரையும் சந்தித்துவிட்டார்.

அந்த பாட்டில் கூட தனது வாழ்க்கையை பற்றித்தான் இருளர் மொழியில் பாடினேன் என வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் சினிமாவில் பாடுவது இதுதான் முதன் முறை என்றும், தான் படிய பாடல் மூலம் இவ்வளவு புகழ் கிடைத்தாலும் பணம் சொத்து வீடு வாசல் ஆகியவற்றில் தமக்கு பெரும் நாட்டம் இல்லை என்று கூறும் அவர், இப்படி எல்லாம் ஒரு பாடல் அதுவும் இருளர் மொழியில் இருக்கிறது என்பதனையும், அதில் ஒளிந்திருக்கும் சோகங்களையும் இன்றைய தலைமுறையினர் புரிந்துகொண்டாலே தனக்கு போதும் என்று அவரது வெகுளித்தனமான சாயலில் கூறுகிறார்.

-எழுத்துரு-
-பிரதீஸ்-  

சித்திரை புதுவருடம் 2020

Written By DTH News on 08 April 2020 | 9:56 PM

புதிய சார்வரி வருடம் நிகழும் மங்களகரமான விகாரி வருடம் பங்குனித்திங்கள் 31ம் நாளில் (2020.04.13) திங்கட்கிழமை முன்னிரவு 07.26 நிமிடமளவில் மலர்கின்றது .

13.04.2020 திங்கட்கிழமை பி.ப 03.26 மணிமுதல் இரவு 11.26மணி வரை மருத்துநீர் வைக்கும் விஷ புண்ணியகாலம், இக்காலத்தில்  தலையில் இலவமிலையும் காலில் விளா இலையும் தரித்து புனிதமாக தயாரிக்கப்பட்ட மருத்து நீரை தோய்த்து நீராடி வெண்மையான பட்டாடை உடுத்தி இறைவழிபாடுகளில் ஈடுபடலாம்.

உப்புசுவை கலந்த தயிர்சோறு உணவாக எடுத்துக்கொள்வது உகந்தது.

நாட்டின் தற்கால நிலையறிந்து சட்டதிட்டங்களை மதித்து பிறக்கும் புதிய வருடத்தை எம் மக்கள் வரவேற்கவும் தயாராகவேண்டும் , விரைவாக நாடு இயல்புநிலைக்கு திரும்பவும், மக்கள் யாவரும் நல் ஆரோக்கியத்துடன் வாழ பிறக்கும் புதுவருடத்தில் அனைவருக்கும் இறைஆசி கிட்ட வேண்டும்.
-நன்றி- 
Kiskanthamuthaly
 
Support : DTH News | DTH News 1st | DTH News 1st
Copyright © 2020. DTH News - All Rights Reserved
Template Created by Pratheeswaran Published by DTH News
Proudly powered by DTH News 1st